வேலூர்:குடியாத்தம் பகுதியிலிருந்து நேற்று முன்தினமும் (ஜன.05) இரவு சுமார் 7 மணியளவில் அரசுப் பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு ஒடுகத்தூர் நோக்கிப் புறப்பட்டது. பின்னர், இரவு 8:30 மணியளவில் ஒடுகத்தூர் பேருந்து நிலையத்தில் பேருந்து நிற்காமல் சென்றதாகக் கூறப்படுகிறது. இதனால், அதில் பயணம் செய்த பெண் ஒருவர் ‘ஏன் வலைவில் நிறுத்தவில்லை, நான் அங்கு தான் இறங்க வேண்டும்’ என்று நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அதற்கு, நடத்துநர் ‘அங்குப் பேருந்து நிறுத்தம் கிடையாது, நான்கு முனை சந்திப்பில் தான் நிற்கும்’ என்று எடுத்துக் கூறினார். ஆனால் அதைக் கேட்காத பெண் திடீரென கையில் வைத்திருந்த சுத்தியலுடன், ‘நீங்கச் சம்பளம் வாங்குறீங்கல எனக்கு அந்த இடத்தில் தான் இறங்கனும்’ என்று பேருந்து கண்ணாடியை உடைப்பது போல் ஆவேசமாகப் பேசினார்.