வேலூர் மாவட்டம் பெரியாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த கீதா (45) என்பவர், தன் கணவர் தேவராஜுடன் சென்னை தனியார் மருத்துவமனைக்குச் செல்வதற்காக ஆம்பூர் ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது, அடுத்த நடைப்பாதைக்குச் செல்வதற்காக கீதா தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது, அவ்வழியாக வந்த மங்களூர் எக்ஸ்பிரஸ் மோதியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தண்டவாளத்தைக் கடக்க முயன்ற பெண் - எக்ஸ்பிரஸ் மோதி உயிரிழப்பு! - mangalore express
வேலூர்: ஆம்பூர் ரயில் நிலையத்தில் அடுத்த நடைபாதைக்குச் செல்வதற்காக தண்டவாளத்தைக் கடக்க முயன்ற பெண் மீது மங்களூர் எக்ஸ்பிரஸ் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.
Woman dies after collision with express train
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரின் கணவர் தேவராஜ் கதறி அழுதார். பின்னர், கீதாவின் உடலைக் கைப்பற்றிய ஜோலார்பேட்டை ரயில்வே காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: குடும்பத் தகராறு - செல்ஃபோன் கோபுரத்தின் மீது ஏறி பெண் போராட்டம்!