தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கடன் தொல்லையால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை! - திருப்பத்தூர்

வேலூர்: திருப்பத்தூர் அருகே கடன் தொல்லை காரணமாக இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர்

By

Published : Aug 12, 2019, 9:42 PM IST

திருப்பத்தூர் அருகே வெங்களாபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் தனசேகர் - ராதா தம்பதி. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.

இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தன்சேகர் வீட்டைவிட்டு வெளியேறிவிட்ட நிலையில், ராதா கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தி வந்துள்ளார்.

கூலி வேலை சரியாக கிடைக்காததால், குடும்பத்தை நடத்த அருகில் இருந்தவர்களிடம் கடன் பெற்றுள்ளார். கடன் கொடுத்தவர்கள் கடனை திருப்பி கேட்டதால், விரக்தியடைந்த ராதா இன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் ராதாவின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கடன் தொல்லையால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

பின்னர் இதுதொடர்பாக வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரண்டு குழந்தைகளின் தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details