தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருமணத்தைத் தாண்டிய உறவில் கணவன் கொலை - மனைவியும் அவரது நண்பரும் கைது! - கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்தத கணவனை மனைவியே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை

வேலூர்:  திருமணத்தைத் தாண்டிய உறவுக்கு இடையூறாக இருந்த கணவனை மனைவியே தனது நண்பருடன் சேர்ந்து கொலை செய்து விட்டு தற்கொலை என நாடகமாடியது அம்பலமாகியதால் கொலை செய்த மனைவி, மற்றும் அவரது நண்பர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

vellore

By

Published : Oct 1, 2019, 10:09 PM IST

வேலூர், காட்பாடி பாரதி நகரைச் சேர்ந்தவர் சரவணன்(50), இவரது மனைவி பவானி(41). இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். மதுப்பழக்கத்துக்கு அடிமையான சரவணன், குடித்துவிட்டு வந்து அடிக்கடி மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த மே மாதம் 2ஆம் தேதி சரவணன் வீட்டில் தூக்குமாட்டிய நிலையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து காவல்துறையினர் அவரது மனைவியிடம் விசாரிக்கையில், மது அருந்த பணம் தராததால் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தார். இந்நிலையில், இன்று சரவணனின் உடற்கூறு ஆய்வில் அவர் கழுத்து நெரித்து கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதனை அறிந்த காவல்துறையினர் பவானியைப் பிடித்து விசாரிக்கையில்,பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதில், பவானி காட்பாடியைச் சேர்ந்த வேலாயுதம்(35) என்பவருடன் திருமணத்தைத் தாண்டிய உறவில் இருந்துள்ளார். இதையறிந்த சரவணன் மனைவியை அடிக்கடி குடித்துவிட்டு கண்டித்துள்ளார்.

பவானியிடம் காவல்துறையினர் விசாரித்த போது!

இதனால் ஆத்திரமடைந்த வேலாயுதம், பவானியின் உதவியுடன் சரவணனை கொல்லத் திட்டமிட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து, சரவணன் மே 2ஆம் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததை பயன்படுத்திக்கொண்ட வேலாயுதம், பவானி இருவரும் சேர்ந்து அவரை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, தூக்கு மாட்டி இறந்ததாக நாடகமாடியுள்ளனர் என்பது தெரிய வந்தது.

இதையடுத்து தற்போது பவானி, அவரது நண்பர் வேலாயுதம் ஆகிய இருவரையும் காட்பாடி காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:

கள்ளக்காதல் விவகாரம்... ரவுடியின் தலையில் கல்லை போட்டு கொன்ற கணவர்

ABOUT THE AUTHOR

...view details