திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் கவுசல்யா(28) இவர் உதவி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தார் அந்த மனுவில்,
”திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த நான் கடந்த 2013ஆம் ஆண்டு பெங்களூரில் பேஷன் டிசைனராக பணியாற்றி கொண்டிருந்தபோது, திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுகா, தானிப்பாடி கிராமத்தைச் சேர்ந்த வாஞ்சிநாதன் (33) எனக்கு முகநூல் வாயிலாக அறிமுகம் ஆனார். ஆரம்பத்தில் நண்பராக பழகிய அவர் ஒரு கட்டத்தில் என்னை காதலிப்பதாகவும், என்னையே திருமணம் செய்துகொள்வதாகவும் கூறினார். அவரது பேச்சைக் கேட்டு நான் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்தேன்.
பிறகு 2013ஆம் ஆண்டு வீட்டிற்கு தெரியாமல் பெங்களூரில் உள்ள கோயிலில் திருமணம் செய்துகொண்டோம். பின்பு வெவ்வேறு இடத்திற்கு அழைத்துச்சென்ற வாஞ்சிநாதன் என் சேமிப்பு பணத்தில் இருந்து ரூ.3 லட்சம் வரை செலவழித்தார். இதைக்கண்ட என் தந்தை எங்களை திருப்பத்தூருக்கு வரும்படி அழைத்தார் . அதன்படி 2015 ஆம் ஆண்டு திருப்பத்தூருக்கு வந்தோம்.
என் தந்தை ரூ.3 லட்சம் செலவழித்து திருப்பத்தூர் - வாணியம்பாடி சாலையில் கவரிங் நகைக் கடையை ஏற்படுத்திக்கொடுத்தார். இந்நிலையில் வியாபாரத்தை பெருக்க வேண்டும் எனக்கூறி எனக்கு சொந்தமான 55 பவுன் தங்க நகைகளை விற்று வாஞ்சிநாதன் செலவழித்தார். அதுமட்டுமின்றி என் தந்தையிடமும், என் உறவினர்களிடமும் ரூ.7 லட்சம் கடன் வாங்கி அதை திருப்பி செலுத்தவில்லை.