வேலூர் மாவட்டம் துத்திப்பட்டு வருவாய் துறையில் ஆய்வாளராக பணியாற்றிவருபவர் ஜெயக்குமார். இவரிடம் எல்.மாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த பெண் கைம்பெண் சான்றிதழ் கேட்டு வந்துள்ளார்.
கணவனை இழந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை..! வருவாய் துறை ஆய்வாளர் சஸ்பெண்ட் - widow abused over phone call
வேலூர் : கைம்பெண் சான்றிதழ் கேட்டுவந்த பெண்ணை, தொலைபேசியில் அழைத்து ஆபாசமாக பேசிய வருவாய் துறை ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
வருவாய்துறை ஆய்வாளர் சஸ்பெண்ட்
இந்நிலையில் ஜெயக்குமார் அப்பெண்ணிடம் சான்றிதழ் அளிப்பதாகக் கூறி தொலைபேசி எண்ணை வாங்கியுள்ளார். பின்னர் சான்றிதழ் கேட்டு வரும் பொழுது அப்பெண்ணிடம் ஆபாசமாக பேசுவது மட்டுமல்லாமல், அவருடைய தொலைபேசி எண்ணிற்கு அழைத்து 40 முறைக்கும் மேலாக ஆபாசமாக பேசியுள்ளார்.
இதனால் மனமுடைந்த அப்பெண் அளித்த புகாரின் பேரில் துத்திப்பட்டு வருவாய் ஆய்வாளர் ஜெயக்குமாரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து டிஆர்ஓ பார்த்திபன் உத்தரவு பிறப்பித்தார்.