தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவில் திருவிழாவில் ராட்டின அச்சாணி உடைந்து விபத்து; அதிருஷ்டவசமாக உயிர் தப்பிய மக்கள்!! - vellore

கங்கையம்மன் கோவில் திருவிழாவுக்கு அமைக்கப்பட்டிருந்த ரங்க ராட்டினத்தில் அச்சாணி உடைந்து ராட்டினம் சாய்ந்து விபத்து அனைவரும் அதிருஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர்.

கோவில் திருவிழாவில் ராட்டின அச்சாணி உடைந்து விபத்து
கோவில் திருவிழாவில் ராட்டின அச்சாணி உடைந்து விபத்து

By

Published : Jun 7, 2022, 8:52 AM IST

வேலூர்: பேர்ணாம்பட்டு அடுத்த பல்லலகுப்பம் கிராமத்தில் வைகாசி மாதம் ஆண்டு தோறும் கங்கை அம்மன் திருவிழா நடைபெறுவது வழக்கம். இதனிடையே பல்லலகுப்பம் கங்கை அம்மன் கோவில் திருவிழா நேற்று (ஜூன்6) வெகு விமர்சையாக நடைபெற்றது.

அப்போது, கங்கையம்மன் திருவிழாவிற்கு அமைக்கப்பட்டிருந்த பொழுதுபோக்கு ரங்க ராட்டினத்தில் அச்சாணி உடைந்ததில் ரங்க ராட்டினம் சாய்ந்தது. மேலும் ராட்டினத்திலிருந்த 20க்கும் மேற்பட்டோர் கூச்சலிட்டனர்.

கோவில் திருவிழாவில் ராட்டின அச்சாணி உடைந்து விபத்து

உடனடியாக அங்கிருந்தவர்கள் அவர்களை பத்திரமாக மீட்டனர். ரங்கராட்டினம் சாய்ந்ததில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மேலும் இச்சம்பவம் குறித்து மேல்பட்டி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவில் திருவிழாவில் ராட்டின அச்சாணி உடைந்து விபத்து

இதையும் படிங்க: வேலூர் மீன் மார்க்கெட்டில் அதிகாரிகளின் திடீர் ஆய்வு - கெட்டுப்போன 12 கிலோ மீன்கள் பறிமுதல்

ABOUT THE AUTHOR

...view details