வேலூர்: பொன்னை அடுத்த கொண்டாரெட்டியூரைச் சேர்ந்தவர் சிவகுமார். விவசாயியான இவரின் மூன்று ஏக்கர் நிலத்தில் பயிரிட்ட நெல் பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்தது. இதனிடையே கடந்த இரண்டு மாதங்களாக பெய்த மழையினால் நெற்பயிர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே சிவகுமார், மத்திய அரசின் பிரதான் மந்திரி பாசல் பீமா யோஜனா திட்டத்தில் காப்பீடு செய்துள்ளார். ஆனால் அலுவலர்கள் நேரில் ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்கவில்லை என இன்று (டிச 1) தனது பயிரை சிவகுமார் தீயிட்டு கொளுத்தி உள்ளார்.
வேலூரில் விவசாய பயிரை கொளுத்திய விவசாயி இதுகுறித்து காட்பாடி வேளாண் உதவி அலுவலர் அசோக்குமார் கூறுகையில், “விவசாயி சிவகுமார் செய்துள்ள பயிர் காப்பீட்டு திட்டம், அறுவடை காலத்தில்தான் கணக்கிடப்படும். மேலும் இது வெள்ள பாதிப்பு அல்ல. அவரது காப்பீடு மீது நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். காப்பீட்டு தொகை வர ஓராண்டாவது ஆகும். சிவகுமாரின் நெல் பாதிப்பு குறித்து கணக்கிட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:205 கிலோ வெங்காயத்தில் கிடைத்த லாபம் வெறும் 8 ரூபாய்தான்..!