தமிழ்நாட்டில் பருவ மழை பொய்த்ததால் சென்னையில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவியது. இந்த குடிநீர் பிரச்னையை தீர்க்க கடந்த ஜூன் 22ஆம் தேதியன்று குடிநீர் திட்டப் பணிகளுக்காக வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து தினமும் 10 ஆயிரம் லிட்டர் குடிநீரை சென்னை வில்லிவாக்கத்திற்கு ரயில்வே வேகன் மூலமாக கொண்டுவந்து வழங்க 65கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து முதலைமைச்சர் உத்தரவிட்டார்.
100ஆவது முறையாக ஜோலார்பேட்டையிலிருந்து வந்த தண்ணீர்! - Water was successfully transported to Chennai
வேலூர்: ஜோலார்பேட்டையிலிருந்து 100வது முறையாக சென்னைக்கு வெற்றிகரமாக தண்ணீர் கொண்டு செல்லப்பட்டது.
அதன்படி, ஜோலார்பேட்டை அடுத்த மேட்டுசக்கரகுப்பத்தில் அமைந்துள்ள காவேரி கூட்டு குடிநீர் திட்ட நீர்தேக்க தொட்டியிலிருந்து ஜோலார்பேட்டை ரயில் நிலையம் வரை குழாய் அமைக்கும் பணி 10 நாட்களில் முடிவுற்று, ஜூலை 12ஆம் தேதி 50 வேகன்களில் 25 லட்சம் லிட்டர் தண்ணீரை சென்னைக்கு ரயில் மூலம் கொண்டு செல்லும் திட்டத்தை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் இயக்குனர் மகேஷ்வரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும், ஜூலை 22ஆம் தேதி முதல் மீண்டும் 50 வேகன்கள் கொண்ட இரண்டு ரயில்களில் நாள் ஒன்றுக்கு சென்னைக்கு 50 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுத்து செல்லப்பட்டது.
அதனை தொடர்ந்து, சென்னைக்கு ரயில் வேகன்களில் மூலம் 100ஆவது முறையாக இதுவரை 25 கோடியே 50 லட்சம் லிட்டர் தண்ணீர் சென்னைக்கு வெற்றிகரமாக கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில், இதனை கொண்டாடும் வகையில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள், ரயில்வே துறை அலுவலர்கள், இப்பணியில் ஈடுப்பட்டுவரும் ஊழியர்களுக்கு இனிப்புகள் கொடுத்து பாராட்டுகளை தெரிவித்தனர்.