தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீ சரியில்லை, மூட்டை கட்டிக்கொண்டு போ - விளையாட்டு அலுவலரை காட்டமாக பேசிய அமைச்சர் துரைமுருகன்! - உதயநிதி ஸ்டாலின்

வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியில் உள்ள விளையாட்டரங்கத்தை ஆய்வு செய்த நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மாவட்ட விளையாட்டு அலுவலரை காட்டமாக பேசிய காணொலி தற்போது வெளியாகியுள்ளது.

விளையாட்டு அலுவலரை காட்டமாக பேசிய அமைச்சர் துரைமுருகன்
விளையாட்டு அலுவலரை காட்டமாக பேசிய அமைச்சர் துரைமுருகன்

By

Published : Jul 17, 2023, 2:51 PM IST

விளையாட்டு அலுவலரை காட்டமாக பேசிய அமைச்சர் துரைமுருகன்

வேலூர்மாவட்ட விளையாட்டு அலுவலரை (நோயலின் ஜான்) நீங்கள் சரி இல்லை, மூட்டை கட்டிக்கொண்டு போ என காட்டமாக பேசிய தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகனின் காணொலி வெளியாகி உள்ளது.

வேலூர் மாவட்டம், காட்பாடி பகுதியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மாவட்ட விளையாட்டு அரங்கம் உள்ளது. இது சரியாக பராமரிக்கப்படாமல் கட்டப்பட்ட நீச்சல் குளம் ஆகும். இதுவரையில் பயன்பாட்டுக்கு வராது இருந்த நிலையில் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், நீர் வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் முன்பு ஆய்வு செய்தார்.

அப்போது விளையாட்டுத்துறை அமைச்சரை ஆய்வுக்கு அழைத்து வந்து தேவையான நிதிகளை பெறலாம் என கூறிச்சென்றார். இந்த நிலையில் இன்று இளைஞர் நலன் மற்றும் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நேரில் அழைத்து வந்து நீச்சல் குளம் விளையாட்டு அரங்கு உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தார்.

இதையும் படிங்க:Minister Ponmudi: அமைச்சர் பொன்முடி, எம்பி பொன் கௌதம சிகாமணி வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை!

முன்னதாக அமைச்சர் துரைமுருகன் காய்ந்து போன நீச்சல் குளத்தில் டிராக்டரை கொண்டு வந்து தண்ணீரை நிரப்பியது யார் என அதிகாரிகளை கடிந்து கொண்டதுடன், ''நீ தான் தண்ணீரை நிரப்பச் சொன்னதா.. நீ சரியில்லை, மூட்டை கட்டிக்கொண்டு போ'' என காட்டமாகப் பேசினார். பின்னர் தமிழ்நாட்டிலேயே செயல்படாத விளையாட்டு அரங்கு என்றும், எல்லா வசதி இருந்தும் இது பராமரிக்கப்படவில்லை எனவும் கூறி உள்ளார். தற்போது இந்த விளையாட்டு அரங்கை சரி செய்வதற்கு எவ்வளவு தொகை தேவை என அமைச்சர் துரைமுருகன் கேட்டு உள்ளார்.

அப்போது அவர்கள் திட்ட மதிப்பீட்டுப்படி ஒன்றை காட்டினார்கள். அப்போது அமைச்சர் துரைமுருகன் 'திட்ட மதிப்பீட்டில் அவ்வளவு தொகை வராது. இதில் உங்களுக்கும் சேர்த்து தொகை போட்டு கொண்டீர்களா?' என கேட்டு உள்ளார். மேலும் விளையாட்டு திடலில் சமூக விரோதிகள் இங்கேயே மதுபானங்களை அருந்துகின்றனர் என கேட்கும்போது அவர்கள் தாக்க வருகின்றனர்.

இதனால் சுற்றுச்சுவர் வேண்டும் என கேட்டபோது 'நீங்களும் அவர்களுடன் சேர்ந்து அருந்துங்கள்' என கிண்டல் அடித்தார். மாவட்ட விளையாட்டு அலுவலரை 'நீங்கள் சரி இல்லை. மூட்டை கட்டிக்கொண்டு போ’ என அமைச்சர் துரைமுருகன் பேசிய காணொலி காட்சி தற்போது வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க:"எங்க வேலை ரொம்ப ஈஸி" - பொன்முடி வீட்டில் ED ரெய்டு குறித்த முதல்வர் கூலாக பேட்டி!

ABOUT THE AUTHOR

...view details