திருப்பத்தூர் அருகே அமைந்துள்ளது ஆண்டியப்பனூர் அணை. 216 பரப்பளவு கொண்ட இந்த அணையானது 112.20 கொள்ளவும் 8மீட்டர் உயரம் அணையாகவும் உள்ளது.
இந்நிலையில் வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்துவருகிறது. இதனால், அணையின் நீர்மட்டம் 5.90 மீட்டராக உயர்ந்துள்ளது. கொள்ளவை பொருத்தவரை 59.84 வரை உயர்ந்துள்ளது. ஆண்டியப்பனூரில் 16 மில்லி மீட்டர் அளவு மழை கொட்டி தீர்த்ததால் ஏரி, குளம் ஆகியவை நிரம்பி வருகிறது.