வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலுக்கான பரப்புரை நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. இதனையடுத்து இன்று வாக்கு இயந்திரங்கள் அந்த அந்த வாக்குச்சாவடிகளுக்கு மத்திய பாதுகாப்பு படையின் பாதுகாப்பில் அனுப்பும் பணி நடைபெற்றது. இதில் வாணியம்பாடி தொகுதிக்கான வாக்கு இயந்திரங்கள் வட்டாச்சியார் முருகன் மற்றும் தேர்தல் அலுவலர் லூர்து சாமி தலைமையில் சரிபார்க்கப்பட்டு வாக்கு சாவடிகளுக்கு அனுப்பப்பட்டது.
சாலைவசதி இல்லாத மலைக்கிராமம்: தலையில் பயணித்த வாக்குஇயந்திரங்கள் - Mountain Village
வேலூர்: சாலைவசதியில்லாத மலைக்கிராமத்திற்கு வாக்குஇயந்திரத்தை தேர்தல் அலுவலர்கள் தலையில் சுமந்து சென்றனர்.
vellore election 2019 vaniyambadi மலை கிராமம் Mountain Village
இதில் வாணியம்பாடி தொகுதிக்குட்பட்ட நெக்னாமலை ஊராட்சிக்கு சாலை வசதி இல்லாததால் வாக்கு இயந்திரங்களை அந்த ஊர் மக்களின் உதவியுடன் தேர்தல் அலுவலர்கள் 7 கிலோ மீட்டர் தூரம் தலையில் சுமந்து சென்றனர். மேலும் இடையில் மழை பெய்ததால் சற்று தாமதமாகவே வாக்கு இயந்திரங்களை கொண்டு சென்றனர். இம்மலைப்பகுதியில் 500-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வசிப்பது குறிப்பிடத்தக்கது