தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 12, 2021, 8:44 AM IST

Updated : Mar 12, 2021, 10:52 AM IST

ETV Bharat / state

நன்றி உணர்வு இருந்தால் விவசாயி சின்னத்துக்கு வாக்களியுங்கள்- சீமான்

வேலூர்: பசித்து உணவு உண்கின்ற ஒவ்வொருவரும் நன்றி உணர்வு இருந்தால் விவசாயி சின்னத்துக்கு வாக்களியுங்கள். இல்லையென்றால் சாப்பிடாமல் பட்டினி இருங்கள் என தேர்தல் பரப்புரையில் சீமான் தெரிவித்துள்ளார்.

சீமான்
சீமான்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேலூரில் அக்கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை செய்தார்.

வேலூர் தொகுதியில் போட்டியிட உள்ள நா. பூங்குன்றன், காட்பாடி தொகுதியில் போட்டியிட உள்ள திருக்குமரன், அணைக்கட்டு தொகுதியில் போட்டி உள்ள சுமித்ரா ஆகிய வேட்பாளர்களை ஆதரித்து வேலூர் மண்டித்தெருவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று (மார்ச்11) வேன் மூலம் பரப்புரை மேற்கொண்டார்.

'நன்றி உணர்வு இருந்தால் விவசாயி சின்னத்துக்கு வாக்களியுங்கள், இல்லையென்றால் சாப்பிடாமல் பட்டினி இருங்கள்'- சீமான்
மக்களுக்கான போராட்டம்

அப்போது பேசிய சீமான், “இந்தியாவில் மருத்துவம் மிகப் பெரிய வியாபாரமாக மாறி உள்ளது, தண்ணீர் மிகப் பெரிய சந்தை பொருளாக மாறி உள்ளது, எவை எல்லாம் அடிப்படையோ, எவை எல்லாம் அவசியமோ அவை எல்லாம் இன்று முதலாளிகளின் லாபம் ஈட்டும் தொழிலாக மாறி உள்ளது.

தற்போது கூட டெல்லியில் 110 நாள்களாக விவசாயிகள் போராடுவது விவசாயிகளுக்கான போராட்டம் மட்டும் அல்ல 130 கோடி மக்களுக்கான போராட்டம். அதற்கு நாம் தமிழர் கட்சியும் ஆதரவு அளித்து வருகிறது.

நன்றி உணர்வு இருந்தால் விவசாயி சின்னத்துக்கு வாக்களியுங்கள் - சீமான்
விவசாயி சாவு இன்று செய்தி, நாளை ?

போராடும் விவசாயிகளை மதிக்காத அரசு இந்த அரசு. விவசாயி சாவு இன்று செய்தி, ஆனால் அது நாளை.. நாம் உணவு இன்றி சாகப் போகின்றோம் என்பதற்கான முன் அறிவிப்பு.

11ஜி(11G) வரை செல்போன் வந்தாலும் கஞ்சி விவசாயி தான் ஊற்ற வேண்டும். இதை உணர்ந்து மக்கள் வாக்களிக்க வேண்டும். விவசாயிகளை மறந்து விடாமல், பசித்து உணவு உண்கின்ற ஒவ்வொருவரும் நன்றி உணர்வு என்று ஒன்று இருந்தால் தயவு செய்து விவசாயி சின்னத்துக்கு வாக்களியுங்கள். இல்லையென்றால் சாப்பிடாமல் பட்டினி இருங்கள் என்றார்.

பெண்ணின் மானம் காக்கப்படுகிறதா

கூட்டத்திற்கு வந்திருந்த பெண் ஒருவர் 'பெண்ணிண் மானம் காக்கப்படுகிறதா' என துண்டு சீட்டு மூலம் சீமானிடம் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதில் அளித்த சீமான், 'பெண்னின் மானத்தை காப்பவன் நான் தான். அதனால் தான் கல்வி, வேலை வாய்ப்பு, அரசியலில் சரிபாதி வாய்ப்பு என சொல்லியிருக்கிறேன். அதனால் தான் 117 பெண்களுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளேன். ஆனால், அதிமுக 17 பெண்ணிற்கு தான் வாய்ப்பு கொடுத்துள்ளது. திமுக என்ன செய்யும் என நாளை பாருங்கள். பெரியாரின் வழிவந்தவர்கள் என அவர்கள் சொல்வார்கள், ஆனால் பிரபாகரனின் பிள்ளைகளாகிய நாங்கள் தான் சாதித்து காட்டுவோம்' எனக் கூறினார்.

Last Updated : Mar 12, 2021, 10:52 AM IST

ABOUT THE AUTHOR

...view details