தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தனி துணை ஆட்சியர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை: சிக்கியது அரை கோடி ரூபாய்? - vellore crime news

வேலூர்: கையூட்டு பெற்ற குற்றத்திற்காகக் கைதுசெய்யப்பட்ட தனி துணை ஆட்சியர் வீட்டில் நடத்திய சோதனையில் 50 லட்ச ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

vigilance-arrested-vellore-sub-collector-for-getting-bribe-50-thousand
வேலூர் சார் ஆட்சியர் கைது

By

Published : Mar 1, 2020, 8:53 AM IST

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனி துணை ஆட்சியராக (முத்திரைத்தாள்) இருப்பவர் தினகரன். இவர் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ரஞ்சித் என்பவரது நிலம் கிரயம் செய்வதில் ஏற்பட்ட குளறுபடி குறித்து விசாரணை நடத்திவந்துள்ளார்.

அப்போது ரஞ்சித் குமாரிடம் தினகரன் ரூ.50 ஆயிரம் கையூட்டு கேட்டுள்ளார். கையூட்டு கொடுக்க விருப்பம் இல்லாத ரஞ்சித் குமார் வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புக் காவல் துறையினரிடம் தகவல் தெரிவித்துள்ளார்.

லஞ்ச ஒழிப்புத் துறையினர் அறிவுரையின்பேரில் நேற்று முன்தினம் இரவு ரசாயனம் தடவிய 50 ஆயிரம் ரூபாய் பணத்தை ரஞ்சித் குமார் வேலூர் சத்துவாச்சாரி பகுதியில் வைத்து தினகரனிடம் வழங்கியபோது அவரை அலுவலர்கள் கையும் களவுமாகப் பிடித்தனர். மேலும் அவருக்கு உடந்தையாக இருந்ததாக ஓட்டுநர் ரமேஷ் என்பவரும் கைதுசெய்யப்பட்டார்.

இதையடுத்து, தினகரனை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அவரது அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் விடிய விடிய விசாரணை நடத்தினர். அதில், லஞ்சப்பணம் ஐம்பதாயிரம் ரூபாய் போக அலுவலகத்தில் வைத்திருந்த கணக்கில் வராத 1.94 லட்சம் பணம் பிடிபட்டது.

தினகரனின் ஓட்டுநர் ரமேஷ்

மேலும் நடத்திய விசாரணையில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. அதாவது தினகரன் தொடர்ந்து நிலம் விவகாரத்தில் பொதுமக்களிடம் லட்சக்கணக்கில் லஞ்சம் பெற்றுவந்தது தெரியவந்தது.

இதையடுத்து காட்பாடி தாங்கல் பகுதியில் உள்ள தினகரனின் வீட்டில் லஞ்ச ஒழிப்புக் காவலர்கள் அதிரடி சோதனை நடத்தியதில் தினகரன் வீட்டில் ஐந்நாறு, இரண்டாயிரம் தாள்கள் கொண்ட பணம் கட்டுக் கட்டாக இருப்பது கண்டறியப்பட்டது.

தனி துணை ஆட்சியர் தினகரன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை

சுமார் 50 லட்சத்துக்கு மேல் பணம் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதற்கிடையில் திருவண்ணாமலை மாவட்டம் போளூரிலும் தினகரனுக்குச் சொந்தமாக வீடு உள்ளதால் அங்கேயும் சோதனை நடத்திவருகின்றனர்.

இந்தப் பணம் குறித்து தினகரனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டுவருகிறது. தனி துணை ஆட்சியர் வீட்டில் கட்டுகட்டாகப் பணம் பறிமுதல்செய்த சம்பவம் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: இதையும் படிங்க:கோவையில் போதைப் பொருள் விற்ற தம்பதி கைது!

ABOUT THE AUTHOR

...view details