தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மத்திய அரசு அகங்காரத்தோடு செயல்படுகிறது! - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

வேலூர்: பாஜகவுக்கு பெரும்பான்மை இருப்பதால் முத்தலாக் உள்பட பல்வேறு விவகாரங்களில் அகங்காரத்தோடு செயல்படுகிறது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி. ராஜா குற்றஞ்சாட்டினார்.

மத்திய அரசு அகங்காரத்தோடு செயல்படுகிறது!

By

Published : Aug 1, 2019, 3:46 AM IST

வேலூர் மக்களவைத் தேர்தலில், திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கதிர் ஆனந்துக்கு ஆதரவாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது.

அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய பொதுச் செயலாளர் டி ராஜா, முத்தலாக் முறை தவறானது என்றுக்கூறி உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. அதை நாங்கள் அப்போதே வரவேற்றோம். ஆனால் சட்டம் என்று வரும்போது, சட்டம் முறையானதாகவும் நேர்மையானதாகவும் இருக்க வேண்டும். ஆகவே முத்தலாக் சட்டத்தை மேலும் ஆராய்வதற்கு மசோதாவை நிலைக்குழுவுக்கு அனுப்ப வேண்டும்.

வேலூர்

ஆனால், பாஜக தனிப்பெரும்பான்மையுடன் இருக்கிறது என்ற மமதையோடு எதிர்க்கட்சிகள் சொல்வதை காது கொடுத்து கேட்காமல் ஒரு அகங்காரத்தோடு செயல்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details