வேலூர் தோட்டப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஐயப்பன்(22). இவர் ஆட்டோ ஓட்டும் தொழில் செய்துவந்தார். இந்நிலையில் நேற்று மாலை வேலூர் ஆற்காடு சாலையில் உள்ள சைதாப்பேட்டைக்கு நண்பருடன் இருசக்கர வாகனத்தில் சென்றார்.
அப்போது ஐயப்பனை அடையாளம் தெரியாத நபர்கள் இரண்டு பேர் திடீரென கீழே தள்ளி கத்தி, கல்லை கொண்டு தாக்கிவிட்டு தப்பினர். இதில் படுகாயமடைந்த ஐயப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வேலூர் வடக்கு காவல் துறையினர் சடத்தை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.