தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேலூரில் குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி - Vellore Child Protection Rally

வேலூர்: மகளிர் தினத்தை முன்னிட்டு குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி
குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி

By

Published : Mar 8, 2020, 12:04 AM IST

உலக மகளிர் தினம் உலகம் முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. இதைமுன்னிட்டு வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள அக்சீலியம் தனியார் மகளிர் கல்லூரி சார்பில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

கல்லூரியில் இருந்து சில்க் மில் வரை சென்ற பேரணி இறுதியாக கல்லூரியிலேயே முடிவடைந்தது. இப்பேரணியின் போது பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவிகள் ஏந்திச்சென்றனர்.

குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி

இதில் சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து கல்லூரி மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளும் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றன.

இதையும் படிங்க: பெண்களுக்கு பணியிடங்களில் பாதுகாப்பு வேண்டும் - தமிழ்நாடு முழுவதும் சிஐடியு போராட்டம்

ABOUT THE AUTHOR

...view details