வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் இந்திய மாதர் தேசிய சம்மேளத்தினர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் லதா தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, வேலூரில் பாலியல் ரீதியாக எத்தனை பாதிப்புகளை கரோனா தொற்று உருவாக்கி வருகிறது என்பதை ஆய்வு செய்யவும், பெண்கள் மீதான தாக்கத்தை தீர்க்கும் வகையில் கொள்கை, திட்டங்களை வகுக்க வேண்டும், அதேபோல் கோவிட் -19 தாக்கத்தை குறைப்பதற்கான பிரதமர் நரேந்திர மோடி அமைத்த பணிக்குழுவில் 50 விழுக்காடு பெண் உறுப்பினர்கள் இருக்கும்படி சீரமைக்க வேண்டும்.