வேலூர்: மேல்பட்டி அருகே உள்ள கிரமாத்தை சேர்ந்த காயத்திரி(25) என்ற கர்ப்பிணிக்கு இன்று (டிசம்பர் 21) அதிகாலை திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால் 108 ஆம்புலன்சை உறவினர்கள் அழைத்து அதன் மூலம் வேலூர் அரசு மருத்துவமனை நோக்கி புறப்பட்டனர். அப்போது செல்லும் வழியில் பிரசவிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
வேலூர் பெண்ணுக்கு ஆம்புலன்சில் நடந்த பிரசவம் - tamil latest news
வேலுரில் பிரசவத்திற்கு சென்ற பெண்ணிற்கு, ஆம்புலன்சிலேயே குழந்தை பிறந்தது.
வேலூர் பெண்ணுக்கு ஆம்புலன்சில் நடந்த பிரசவம்
ஆம்புலன்சில் இருந்த மருத்துவ உதவியாளர் வி.சதீஷ், அந்த பெண்ணிற்கு பிரசவம் பார்த்தார். இதையடுத்து காயத்திரிக்கு பெண் குழந்தை பிறந்தது. தாயும் குழந்தையும் நலமாக உள்ளனர். அதன்பின் அந்த பெண்ணும், குழந்தையும் வேலூர் அரசு மருத்துவமனை சேர்க்கைப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க:அரசுப்பள்ளிக்கு ஊரே சேர்ந்து கொடுத்த வாகன கிஃப்ட் - திக்குமுக்காடி போன மாணவர்கள்