வேலூர்: ரங்காபுரத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் பிரபு. இவர் செல்போன் மூலம் அறிமுகமாகி பின்னர் காதலித்து மாலினி என்ற பெண் காவலரைத் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் வெவ்வேறு மதங்களைச் சார்ந்தவர்கள். இவர்கள் 2012 ஆம் ஆண்டு செப்டம்பர் 14-ஆம் நாள் இந்து முறைப்படி நாகர்கோவில் அருகே உள்ள நாகராஜா கோயிலில் திருமணம் செய்துகொண்டனர்.
இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் பிரபு தன் மனைவி வேறு ஒரு உதவி ஆய்வாளர் உடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாக குற்றம்சாட்டியுள்ள பிரபு, குழந்தைகளை மீட்டுத் தரக்கோரி என வேலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்துள்ளார்.
இதுகுறித்து பிரபு கூறியதாவது, "எனது மனைவி காவலர் பயிற்சி பெற்ற போது ஒருவரைக் காதலித்ததாகவும் அவருடன் சில ஆண்டுகள் வசித்து வந்ததாகவும் கூறினார். சரி என மன்னித்து அவரை மனைவியாக ஏற்றுக்கொண்டேன். மனைவியின் பெற்றோர் தங்கள் மகள் சரியில்லை வேண்டாம் என எவ்வளவு எடுத்துச் சொல்லியும் நான் இவரை திருமணம் செய்துக்கொண்டேன்.