தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இருசக்கர வாகனங்களை திருடிய 2 வாலிபர்கள் கைது - for stealing two wheelers

வேலூர்: ஆம்பூரில் தொடர் இரு சக்கர வாகன திருட்டில் ஈடுபட்டுவந்த 2 வாலிபர்களை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 3 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

இருசக்கர வாகனங்களை திருடிய 2 வாலிபர்கள் கைது

By

Published : Sep 23, 2019, 5:43 PM IST


வேலூர் மாவட்டம் ஆம்பூர் நகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து 3 இருசக்கர வாகனங்களை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றனர். இதனையடுத்து சிசிடிவி காட்சிகளை வைத்து கொள்ளையர்களை பிடிக்க காவல் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது ஆம்பூர் ஜலால் பேட்டை பகுதியை சேர்ந்த புல்ஸ்கான், மணிகண்டன் ஆகிய 2 வாலிபர்களிடம் காவல் துறையினர் விசாரணை செய்தனர். இதனையடுத்து இவர்கள் ஆம்பூரில் தொடர் இரு சக்கர வாகன திருட்டில் ஈடுபட்டவர்கள் என்பது தெரியவந்தது.

இருசக்கர வாகனங்களை திருடிய 2 வாலிபர்கள் கைது

இதைத் தொடர்ந்து 2 வாலிபர்களையும் காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 3 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

இதையும் படிங்க: அம்மன் கோயிலையே குறிவைத்து திருடும் 4 திருடர்கள் கைது!

ABOUT THE AUTHOR

...view details