வேலூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த அம்பலூர் பகுதியில் உள்ள இந்தியன் நம்பர் 1 வங்கி, தெக்குபட்டு பகுதியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி ஏ.டி.எம்.களில் நேற்று இரவு அடையாளம் தெரியாத நபர்கள் தொடர் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர்.
கொள்ளைச் சம்பவங்களை மறைக்க மிளகாய்ப்பொடி தூவி அருகிலுள்ள சிசிடிவி கேமரா மீது ஸ்பிரே அடித்துவிட்டு அடையாளம் தெரியாத நபர்கள் தப்பி ஓடியுள்ளனர்.