வேலூர் மாவட்டத்தில் கரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில் இன்று மட்டும் காலை நிலவரப்படி 90 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
தற்போது, மாவட்டத்தில் கரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 1643 ஆக உயர்ந்துள்ளது. 419 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதுவரையில் மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு 14 பேர் உயிரிழந்த நிலையில் இன்று காலை வேலூர் தனியார் சிஎம்சி மருத்துவமனையில் கரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த வேலூர் ஆர்.என்.பாளையத்தை சேர்ந்த (80) வயது முதியவர், சத்துவாச்சாரி பகுதியை சேர்ந்த (59) முதியவர் என இருவர் உயிரிழந்துள்ளனர்.