தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பசுவை வேட்டையாடிய புலி : அச்சத்தில் மலை கிராம மக்கள் - வேலூர்

வேலூர் : வனத்தில் புல் மேய்ந்து கொண்டிருந்த பசுவை, புலி ஒன்று வேட்டையாடிய சம்பவம் அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

Tiger who hunted the cow  hunted Tiger  vellore  பசுவை வேட்டையாடிய புலி  வேட்டை புலி  வேலூர்  பொதுமக்கள் அச்சம்
Tiger who hunted the cow hunted Tiger vellore பசுவை வேட்டையாடிய புலி வேட்டை புலி வேலூர் பொதுமக்கள் அச்சம்

By

Published : Jun 1, 2020, 11:23 AM IST

வேலூர் மாவட்டம், குடியாத்தம் பகுதியை அடுத்து உள்ளது கல்லப்பாடி மலை கிராமம். இப்பகுதியை சேர்ந்த சிவகுமார் என்பவருக்கு சொந்தமான பசுமாடு ஒன்று அருகிலுள்ள வனத்துக்கு புல் மேய சென்ற நிலையில், வெகுநேரமாகியும் பசு வீடு திரும்பவில்லை.

இதனைத் தொடர்ந்து, மலைப்பகுதிக்கு சென்று சிவகுமார் பார்த்தபோது, உடலில் காயங்களுடன் பசு மாடு இறந்து கிடந்தது தெரிய வந்தது. தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக வனத்துறையினருக்கு அவர் தகவல் தெரிவித்தார்.

பசுவை வேட்டையாடிய புலி!

இது குறித்து நடந்த முதல்கட்ட விசாரணையில், பசு மாட்டை சிறுத்தை புலி அடித்து கொன்றிருப்பதை வனத்துறை காவலர்கள் உறுதி செய்தனர். தொடர்ந்து அப்பகுதியில் சிறுத்தை புலி நடமாட்டத்தையும் கவனித்து வருகின்றனர்.

வனப் பகுதிக்கு புல் மேய சென்ற பசு மாட்டை சிறுத்தைப் புலி அடித்து கொன்ற சம்பவம், அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: 'அடேய் நான் தண்ணீர் குடிக்கத்தான் வந்திருக்கேன்' - யானைக்கன்றால் மிரண்டோடிய மான் கூட்டம்!

ABOUT THE AUTHOR

...view details