வேலூர்:தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் உத்தரவின் பேரில் தமிழ்நாட்டில் கந்துவட்டி வசூலிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் பொருட்டு "ஆபரேஷன் கந்துவட்டி" ரெய்டு நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் "வேலூர் மாவட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை பாதிப்புக்குள்ளாக்கும் வகையில் கடனுக்கு கந்துவட்டி, மீட்டர் வட்டி உள்ளிட்ட பல்வேறு பெயர்களில் அதிக வட்டி வசூலிப்பவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வேலூர் எஸ்.பி ராஜேஷ் கண்ணண் தெரிவித்துள்ளார்.
மேலும், கந்துவட்டி கும்பலால் பாதிக்கப்பட்டவர்கள் அந்தந்த பகுதிகளிலுள்ள காவல் நிலையங்களில் புகார் அளிக்க அறிவுறுத்தப்படுகிறது. அவ்வாறு பெறப்படும் புகார்கள் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்யப்பட்டு கந்துவட்டி வசூலிப்பவர்களைக் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து அவர்களின் சொத்துகளைப் பறிமுதல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என வேலூர் எஸ்.பி ராஜேஷ் கண்ணண் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கந்துவட்டி வசூலிப்பவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை இதையும் படிங்க: கந்துவட்டி கொடுமைகளைத் தடுக்க "ஆபரேஷன் கந்துவட்டி" - டிஜிபி அதிரடி உத்தரவு!