குளிர்காலம் முடிந்து தமிழ்நாட்டில் கோடை காலம் தொடங்கிவிட்டது. தொடக்கத்திலேயே கடும் தாக்கத்தை கோடை காலம் ஏற்படுத்தியுள்ளது. கோடையின் தாக்கம் திருப்பத்தூர் புதிய பேருந்து நிலையப் பகுதியில் சற்று அதிகமாகவே உள்ளது.
கோடையைச் சமாளிக்க போக்குவரத்துக் காவலர்களுக்கு ’ஆ’வின் மோர்! - திருப்பத்தூரில் போக்குவரத்து காவலர்களின் தாகம் தனிக்க ஆவின் மோர் வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
திருப்பத்தூர்: கோடையில் வெயிலைச் சமாளிக்கும் பொருட்டு போக்குவரத்துக் காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோர் வழங்கினார்.

vellore SP distribute butter milk to traffic police
மோர் வழங்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
இந்நிலையில், கடும் வெயிலில் போக்குவரத்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களுக்கு கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், அவர்களின் தாகத்தைத் தனிக்கும் வகையில் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் ஆவின் மோர் பாட்டில்களை வழங்கினார். இனி வருங்காலங்களில் கோடை வெயிலைச் சமாளிக்க தினந்தோறும் காவலர்களுக்கு மோர் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இதையும் படிங்க:கோடை காலம்....போக்குவரத்து காவலர்களுக்கு உபகரணங்களை வழங்கிய சேலம் ஆணையர்!