வேலூர் மாவட்டம், சேண்பாக்கத்தில் 16 வயது சிறுமிக்கு ஆரணியைச் சேர்ந்த 27 வயது இளைஞரை திருமணம் செய்துவைக்க இன்று(ஜூலை.13) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட சமூக நலத்துறைக்கு தகவல்கிடைத்தது.
இத்தகவலையடுத்து, அங்கு விரைந்த சமூக நலத்துறை அலுவலர்கள் திருமணத்தைத் தடுத்து நிறுத்தினர். அதைத்தொடர்ந்து, சிறுமியை மீட்டு அரசு உதவிபெறும் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
இதுதொடர்பாக, சிறுமியின் பெற்றோரிடம் விசாரணை நடத்தப்பட்டுவருகின்றது. இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட சமூக நலத்துறை அலுவலர்கள், "வேலூரில் இதுவரை 40 குழந்தை திருமணங்கள் தடுக்கப்பட்டுள்ளன.
அதில் கடந்த வாரம் மட்டும் 12 திருமணங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. ஊரடங்கைப் பயன்படுத்தி பல பெற்றோர்கள் குழந்தை திருமண சம்பவங்களில் ஈடுபடுவது வருத்தத்திற்குரியது" என்று தெரிவித்தனர்.
இதையும் படிங்க:சிறுமியை கடத்தி திருமணம் செய்தவர் கைது!