வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள ஓடைபிள்ளையார் கோவில் பேருந்து நிறுத்தம் அருகில் குழந்தைகள் பாதுகாப்பு, குழந்தைகள் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தொடங்கிவைத்தார்.
இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தியும், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் ஏற்படாமல் இருக்கவும், தெரியாத நபர்களிடம் தொலைபேசி எண் முகவரி அளிக்கக் கூடாது, வெளிநபர்களிடம் புகைப்படங்களை அளிக்கக் கூடாது, ரகசியங்களை பாதுகாக்க வேண்டும் ஆகியவற்றை வலியுறுத்தி மாணவர்கள் கையில் பாதாகைகள் ஏந்தி விழிப்புணர்வு மாரத்தான் நடைபெற்றது.