வேலூர் மாவட்டம் ஆற்காடு அருகே உள்ள வேப்பூர் பகுதியை சேர்ந்தவர் ஜீவானந்தம்(43). இவர் ஆட்டோ ஓட்டும் வேலை செய்துவந்தார். இந்த நிலையில் இன்று ஜீவானந்தம் தனது ஆட்டோவில் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வள்ளலார் மேம்பாலத்தை கடந்து வேலூர் அருகே வந்து கொண்டிருந்தார்.
அப்போது சாலையோரம் நின்றிருந்த மினி வேனை கவனிக்காமல் ஜீவானந்தம் மின்னல் வேகத்தில் அதன் மீது மோதியுள்ளார். இதில் ஜீவானந்தம் பலத்த காயம் அடைந்தார். அவரது ஆட்டோவும் கடும் சேதமடைந்தது. சம்பவத்தின்போது அருகே இருந்தவர்கள் அளித்த தகவல் மூலமாக அங்கு வந்த ஆம்புலன்ஸ் ஜீவானந்தத்தை மீட்டு சிகிச்சைக்காக வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் சேர்த்தனர்.