வேலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த இரண்டு தினங்களாக காலை நேரம் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இந்ந நிலையில் மாலை மற்றும் நள்ளிரவிலும் வேலூர் மாவட்டம் முழுவதும் மீண்டும் பலத்த மழை பெய்தது.
அதன்படி திருப்பத்தூர், ஆம்பூர், வாணியம்பாடி, குடியாத்தம், வேலூர், காட்பாடி உள்ளிட்ட இடங்களில் நள்ளிரவில் தொடங்கிய மழை அதிகாலை வரை பெய்தது.