தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேலூர் சிறை கைதி மாரடைப்பால் மரணம்! - vellore district news

ராணிப்பேட்டை: வேலூர் மத்திய சிறை கைதி மாரடைப்பால் உயிரிழந்தார்.

வேலூர் சிறைக் கைதி மாரடைப்பால் மரணம்
வேலூர் சிறைக் கைதி மாரடைப்பால் மரணம்

By

Published : Oct 31, 2020, 7:34 PM IST

வேலூர் மத்திய சிறையில் நேற்று (அக். 30) பழநி (57) என்ற சிறை கைதிக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. உடனே சிறை காவலர்கள் அவரை வேலூரில் உள்ள அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

ஆனால் கைதி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். உடற்கூராய்வில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இன்று (அக். 31) கைதி உயிரிழந்தது குறித்து வேலூர் மாவட்ட நீதிமன்றம் விசாரணை நடத்தியது. கைதி ராணிப்பேட்டை மாவட்டம் வாங்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர்.

2020 மார்ச் மாதம் கள்ளச்சாராய வழக்கில் வாலாஜா காவல் துறையினரால் கைதுசெய்யப்பட்டு கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார். பிறகு வேலூர் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.

இதையும் படிங்க: கரோனா எதிரொலி: கைதிகள் விடுதலை

ABOUT THE AUTHOR

...view details