கரோனா வைரஸ் தொற்றுத் தாக்கத்தால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியக் கடைகளை தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. இந்த இக்கட்டான சூழ்நிலையில்தான், வேலூர் மாவட்ட காவல் துறையினருக்குக் கள்ளச்சாராயம் விற்பனையாளர்கள் பெறும் சவாலாக உள்ளனர்.
இதனால், மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவும், காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் அமைக்கப்பட்ட ஐந்துக் குழுவும் இணைந்து, தீவிர சோதனை நடத்தினர். அப்போது, மலைப்பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாகக் கிடைத்த தகவலையடுத்து, அப்பகுதிக்கு விரைந்து சோதனையில் ஈடுபட்டனர்.