கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட மக்களைக் காக்க மருத்துவர்களும், புதிய பாதிப்புகள் உருவாகாதவண்ணம் காவல் துறையினரும் ஒவ்வொரு நாளும் முழு முயற்சியில் ஈடுபட்டுவருகின்றனர்.
மக்கள் வீட்டை விட்டு வெளியேறுவதால் வைரஸ் பரவலின் வீரியம் அதிகரிக்கும் என்பதால் அவர்கள் வீடுகளுக்குள்ளே இருக்க ஒவ்வொரு நாளும், பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு நடுவே பாதுகாப்புப் பணியிலும், ரோந்துப் பணியிலும் ஈடுபட்டுவருகின்றனர். தாங்கள் எந்நேரமும் நோய்த் தாக்குதலுக்கு உள்படலாம் என்றறிந்தே தங்களது பணியில் தினமும் ஈடுபடுகின்றனர்.
இந்நிலையில், மக்களைப் பாதுகாக்க வேலூர் மாவட்ட காவல் துறை தொடர்ந்து பல்வேறு விழிப்புணர்வுகளை மக்களிடம் ஏற்படுத்திவருகிறது. அந்த வகையில் தற்போது வேலூர் மாவட்ட காவல் துறை களத்தில் பணியாற்றும் காவலர்களைக் கொண்டு, அவர்கள் நாளுக்குநாள் சந்திக்கும் இன்னல்களை விழிப்புணர்வுக் காணொலியாக வெளியிட்டுள்ளது. இந்தக் காணொலி காண்போர் மனதை நெருடும் வகையில் அமைந்துள்ளது.
இதையும் படிங்க: எமன் பொம்மை அணிந்து காவல் துறையினர் விழிப்புணர்வு