தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மணல் கடத்தல்காரர்களிடம் மாமூல்: காவலர் பணியிடை நீக்கம் - police officer suspend

மணல் கடத்தல்காரர்களிடம் கையூட்டுப் பெற்றதாகச் சத்துவாச்சாரி முதல்நிலைக் காவலரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.

police officer suspend
காவலர் பணியிடை நீக்கம்

By

Published : Jul 20, 2021, 8:03 PM IST

வேலூர்:சத்துவாச்சாரி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் மாட்டுவண்டி, இருசக்கர வாகனங்களில் மணல் கடத்தல் நடந்துவருகிறது. மணல் கடத்தும் கும்பலிடம் கையூட்டுப் பெற்றுக்கொண்டு, குற்றச் செயலை அனுமதிப்பதாக காவலர்கள் மீது புகார் எழுந்தது.

இது குறித்து விசாரணை நடத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் உத்தரவிட்டார். இதில் சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் பணியாற்றும் முதல்நிலைக் காவலர் தினகரன் மணல் கடத்தல் கும்பலிடமிருந்து கையூட்டு வாங்கியது தெரியவந்தது.

இவர் சத்துவாச்சாரி காவல் ஆய்வாளர் பெயரைப் பயன்படுத்தி மணல் கடத்தல் கும்பல்களிடம் பணம் வசூல் செய்ததும் தெரியவந்தது. இதனையடுத்து தினகரனை பணியிடை நீக்கம்செய்து வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் உத்தரவிட்டார்.

வேலூர் மாவட்டத்தில் மணல் கடத்தல் கும்பலுக்கு காவலர்கள் உடந்தையாக இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பரோலில் சென்ற கைதி தலைமறைவு: போலீசார் விசாரணை!

ABOUT THE AUTHOR

...view details