தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஸ்டாலின் மகனுக்கு ஏன் அவசர பட்டாபிஷேகம்? -எடப்பாடி பழனிசாமி கேள்வி

வேலூர்: திமுகவில் வாரிசு அரசியல் நடைபெறுகிறது என்றும், ஸ்டாலின் மகனுக்கு எதற்கு அவசரமாக பட்டாபிஷேகம் வழங்கப்பட்டுள்ளது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி

By

Published : Jul 28, 2019, 11:24 PM IST

வேலூர் மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் ஏ.சி.சண்முகம் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கே.வி.குப்பம் பேருந்து நிலையத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ஸ்டாலின் கூறியது போல் சதி செய்து நாங்கள் தேர்தலை நிறத்தவில்லை. நீங்கள் வாக்காளர்களுக்கு மூட்டை மூட்டையாக பணம் கொடுக்க முயன்றதால் தான் தேர்தலை நிறுத்தினோம் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், ஸ்டாலின் பச்சை பொய் பேசுகிறார். தேர்தல் தள்ளி போக முழுக்க முழுக்க திமுக தான் காரணம் என்று உண்மை அறிந்து பேச வேண்டும். கர்நாடகாவில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ்ந்ததற்கு சட்டசபையில் திமுக எம்எல்ஏக்கள் நடனம் ஆடுகின்றனர். இவர்கள் எல்லாம் நாட்டை ஆள வேண்டுமா? ஒருகாலமும் அதிமுகவை வீழ்த்த முடியாது. தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த சபாநாயகரை இருக்கையை விட்டு இழுத்து அவமானப்படுத்தினார்கள். நீங்களா நாடாள தகுதி படைத்தவர்கள்? என கடுமையாக விமர்சித்து பேசினார்.

முதலமைச்சர் பழனிசாமி

மேலும், ஆசைவார்த்தை காட்டி அதிமுக எம்எல்ஏக்கள் 18 பேரை பிரித்து வெளியே கொண்டு போனீர்கள். நீங்கள் நினைத்தது நடந்ததா?அத்தனை முயற்சியிலும் தோற்றுபோனீர்கள். அதிமுக தொண்டனை கூட நீங்கள் தொட்டு பார்க்க முடியாது. சாதாரண தொண்டன் கூட முதலமைச்சர் ஆக முடியும். திமுகவில் வாரிசு தான் போட்டியிடுகிறது. ஸ்டாலின் மகனுக்கு எதற்கு அவசரமாக பட்டாபிஷேகம் என கேள்வி எழுப்பினார்.

ABOUT THE AUTHOR

...view details