வேலூர் தொகுதி மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஏசி சண்முகத்தை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று இறுதிக்கட்ட பரப்புரையை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ஸ்டாலின் எத்தனை குட்டி கரணம் அடித்தாலும் அதிமுக ஆட்சியை கலைக்க முடியாது. எங்கள் ஆட்சியை கவிழ்க்க நினைத்தால் நீங்கள் எப்போதும் சட்டையை கிழித்து கொண்டு தான் திரிய வேண்டும் என விமர்சித்தார்.
சதுரங்கவேட்டை பட பாணியில் மக்களை ஏமாற்றிய ஸ்டாலின்! - parlement election
வேலூர்: திமுகவினர் ஒழுங்காக இருந்தாலே தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கும் என்றும் சதுரங்க வேட்டை பட பாணியில் ஸ்டாலின் மக்களிடம் ஆசையை தூண்டி வெற்றி பெற்றுள்ளார் என்று முதலமைச்சர் பழனிசாமி கடுமையாக விமர்சித்து பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர், சட்டம் இயற்றுகின்ற சட்டமன்றத்தில் திமுகவினர் ஜெயலலிதாவை அவமானப்படுத்தினார்கள். சட்டம் ஒழுங்கை பற்றி பேச திமுகவுக்கு என்ன தகுதி இருக்கிறது? கட்டப்பஞ்சாயத்து செய்ய முயலும் ஸ்டாலின், கட்சித் தலைவரா? கட்டப்பஞ்சாயத்து தலைவரா? திருநெல்வேலியில் முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை செய்யப்பட்டார். அப்போது திமுக தலைவர் ஸ்டாலின் திருநெல்வேலி சென்று அஞ்சலி செலுத்தி விட்டு, சட்டம் ஒருங்கு சரியில்லை என்கிறார்.
அடுத்த இரண்டே நாளில் அந்த வழக்கில் திமுக பிரமுகர் கைது செய்யப்படார். இதற்கு யார் காரணம். திமுகவின் உள்கட்சி பூசல் தலைவிரித்தாடுகிறது. விஞ்ஞான மூளை படைத்த திமுக பொய்யான வாக்குறுதிகள் கொடுத்ததும் அதை நம்பி ஓட்டு போட்டு விட்டனர். சதுரங்கவேட்டை பட பாணியில் ஸ்டாலின் மக்களிடம் ஆசையை தூண்டி ஏமாற்றி விட்டார் என்றும் அவர் கூறினார்.