வேலூர் சத்துவாச்சாரி பேஸ்-3 பகுதியைச் சேர்ந்தவர் ருத்ரமூர்த்தி (42). இவர் தமிழ்நாடு அரசின் வேளாண் துறையில் பணிபுரிந்து வந்தார்.
இவர் இன்று காலை தனது மனைவியை சத்துவாச்சாரியில் உள்ள தனியார் பள்ளியில் வழியனுப்பிவைத்து விட்டு, அருகில் உள்ள சென்னை டூ பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலையை கடக்க முயன்றபோது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் மின்னல் வேகத்தில் ருத்ரமூர்த்தி மீது மோதிய விபத்தில் அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார்.
தொடர்ந்து பொதுமக்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே ருத்ரமூர்த்தி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.
இதுகுறித்து சத்துவாச்சாரி காவல் நிலையம் வழக்குப்பதிவு செய்து சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டதில், இருசக்கர வாகனத்தில் வந்த நபர் வேலூர் அணைக்கட்டு பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் (25) என்பது தெரியவந்தது. அவரிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:'நமஸ்தே ட்ரம்ப்' நிகழ்ச்சியிலிருந்து ஊர் திரும்புகையில் விபத்து - 11 போலீஸார் காயம்