தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேலூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி  வேட்பாளர் அறிவிப்பு - நாம்தமிழர் கட்சி

சென்னை: வேலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரை, அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.

வேலூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி  வேட்பாளர் அறிவிப்

By

Published : Jul 8, 2019, 1:10 PM IST

வேலூரில் மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தின் உறவினர்கள் வீட்டிலிருந்து 10 கோடி ரூபாய் பணம், வருமானவரித் துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனால், அந்த பணம் வாக்காளர்களுக்கு அளிக்க இருந்ததாக்ககூறி வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.


இந்நிலையில் வரும் ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி வேலூரில் மக்களவைத் தேர்தல் நடைபெறும் என, தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனால் அனைத்து கட்சிகளும், தங்களது வேட்பாளர்களை அறிவித்த வண்ணம் உள்ளன.

அதன் அடிப்படையில் நாம் தமிழர் கட்சி சார்பாக வேலூர் மக்களவைத் தொகுதியில், தீபலட்சுமி போட்டியிடுவர் என அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.

வேட்பாளர் மனு

மேலும், நாம்தமிழர் கட்சியின் அனைத்து பொறுப்பாளர்களும் வேட்பாளருக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமெனவும், மாநிலம் முழுவதும் உள்ள நம் கட்சியின் உறவுகள் அனைவரும் இத்தேர்தல் களத்தில் பங்கேற்று தங்களது பங்களிப்பை கொடுத்து வெற்றிக்கு உழைக்க வேண்டுமெனவும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அறிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details