தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேலூரில் வடகிழக்குப் பருவழை முன்னெச்சரிக்கைப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்! - வேலூர் செய்திகள்

வேலூர்: வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கைப் பணிகள் குறித்து வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மைச் செயலாளர் ராஜேஷ் லக்கானி ஆலோசனை நடத்தினார்.

Vellore meeting on monsoon preparations

By

Published : Oct 2, 2019, 7:06 PM IST

வேலூர் மாவட்டத்தில், வடகிழக்குப் பருவமழை தொடர்பாக எடுக்கப்பட்டு வரும் முன்னெச்சரிக்கைப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை முதன்மைச் செயலாளர் ராஜேஷ் லக்கானி தலைமையில் நடைபெற்றது.

வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கைப் பணிகள் ஆலோசனைக் கூட்டம்

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம், திருப்பத்தூர் புதிய மாவட்ட சிறப்பு அதிகாரி சிவனருள், ராணிப்பேட்டை, புதிய மாவட்ட சிறப்பு அதிகாரி திவ்யதர்ஷினி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தின்போது வேலூர் மாவட்டத்தில் பருவமழைத் தொடர்பாக இதுவரை எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரத்திடம் ராஜேஷ் லக்கானி கேட்டறிந்தார். மேலும், வேலூர் மாவட்டத்தில் செயல்பட்டுவரும் அரசுத் திட்டங்கள் குறித்தும், அவற்றிற்கு ஒதுக்கப்பட்ட நிதிகள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக குடிமராத்து உள்ளிட்ட முக்கியத் திட்டங்கள் குறித்தும் மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்தார்.

ABOUT THE AUTHOR

...view details