தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மியான்மருக்கு சுற்றுலா சென்றவர் உயிரிழப்பு: காணொலி காட்சி மூலம் இறுதி சடங்கு! - Vellore man died in Myanmar

வேலூர்: சுற்றுலா சென்று நாடு திரும்ப முடியாமல் மியான்மரில் உயிரிழந்தவரின் இறுதி சடங்கை காணொலி காட்சி மூலம் உறவினர்கள் செய்தனர்.

மியான்மருக்கு சுற்றுலா சென்றவர் உயிரிழப்பு: காணொளி காட்சி மூலம் இறுதி சடங்கு!
மியான்மருக்கு சுற்றுலா சென்றவர் உயிரிழப்பு: காணொளி காட்சி மூலம் இறுதி சடங்கு!

By

Published : May 6, 2020, 10:27 AM IST

Updated : May 6, 2020, 12:13 PM IST

வேலூர் வசந்தபுரத்தைச் சேர்ந்தவர் தென்னரசு(59), மாநகராட்சியில் உதவி பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இந்நிலையில் இவரும் மனைவி மணிமேகலையும் கடந்த மார்ச் 10ஆம் தேதி மியான்மர் நாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளனர்.

இதனையடுத்து ஏப்ரல் 5ஆம் தேதி ஊர் திரும்ப இருந்த நிலையில், ஊரடங்கு காரணமாக மியான்மரில் உள்ள ரங்கூன் நகரில் தங்கியிருந்தனர்.

இந்நிலையில் நேற்று தென்னரசுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது குறித்து இந்திய தூதரகத்திற்க்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால், உடலை இந்தியா எடுத்து செல்ல முடியாது என்றும், இங்கேயே அடக்கம் செய்ய ஏற்பாடு செய்வதாகவும் அலுவலர்கள் கூறியுள்ளனர்.

மியான்மருக்கு சுற்றுலா சென்றவர் உயிரிழப்பு: காணொளி காட்சி மூலம் இறுதி சடங்கு!

இதையடுத்து ரங்கூனில் உள்ள தமிழ் சங்கத்தினரின் உதவியுடன் தென்னரசு உடல் அடக்கம் செய்யப்பட்டது. இதில் வேலூரில் உள்ள தென்னரசுவின் மகன்கள், உறவினர்கள் ஆகியோர் காணொலி காட்சி மூலம் இறுதி சடங்கை செய்து, உடல் அடக்கத்தையும் காணொலி காட்சி மூலம் கண்டனர்.

இதையும் படிங்க...டிக்-டாக் செயலி மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிய மதுரை இளைஞர்!

Last Updated : May 6, 2020, 12:13 PM IST

ABOUT THE AUTHOR

...view details