தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பிரதமர் குறித்து அவதூறு - நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை - பிரதமர் மோடி

பாஜக குறித்தும், பிரதமர் நரேந்திர மோடி குறித்தும் அவதூறு பரப்பியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி வேலூர் இப்ராஹிம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை
நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

By

Published : Feb 2, 2022, 8:35 AM IST

Updated : Feb 2, 2022, 12:02 PM IST

வேலூர்:பாஜக குறித்தும், நரேந்திர மோடி குறித்தும் ஃபேஸ்புக் பக்கத்தில் அவதூறு செய்திகளைப் பரப்பியும், கேலி சித்திரங்களை வெளியிட்டும் வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜக சிறுபான்மை அணியின் தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் வேலூர் சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் நேற்று (பிப்ரவரி 1) புகார் அளித்துள்ளார்.

அதில், “உள்ளாட்சித் தேர்தல் குறித்து ஆலோசனை மேற்கொள்வதற்காகத் தமிழ்நாடு முழுவதும் பயணித்துவருகிறேன். இதன் ஒரு பகுதியாக வேலூர் மாவட்டத்திற்கு இன்று வந்திருந்தேன்.

அவதூறு பரப்பியவர் கைது

அப்போது எனது முகநூல் பக்கத்தைப் பார்த்தபோது அதில், ‘இந்தியப் பிரதமர் மாட்டுச் சாணத்தை உண்ணுவது போன்றும்’, ‘நாட்டில் மதக்கலவரத்தைச் செய்திட வாக்களிப்பீர் தாமரை’ என்று பாஜகவின் கட்சி சின்னம், பெயரை பயன்படுத்தியும்.

அவதூறு பரப்பியவர் மீது புகார்

‘ஆனால் நீ பலியாடாக ஆகப் போரது உண்மை’ என்று கொலை மிரட்டல் விடுத்தும் பாஜக, பிரதமரை இழிவாகச் சித்திரித்து கலவரத்தை ஏற்படுத்தி, பொது அமைதிக்கு ஊறுவிளைவிக்கும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

பாஜக குறித்து அவதூறு

இதையும் படிங்க:'2022-2023 பட்ஜெட் நனைந்து போன பட்டாசு...; ஏமாற்றம் தரும் பட்ஜெட்' - தமிழ்நாடு கட்சித் தலைவர்கள் கருத்து

Last Updated : Feb 2, 2022, 12:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details