வேலூர்:கடந்த சில நாள்களாக வேலூர் மாவட்டம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. இந்தநிலையில் ஆந்திர மாநிலம் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் மோர்தானா அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, இதுவரை இல்லாத வகையில் சுமார் 20ஆயிரம் கனஅடி தண்ணீர் வேலூரில் உள்ள கவுண்டண்யா ஆற்றில் வெளியேற்றப்பட்டது.
இதனால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தற்போது படிப்படியாக நீர்வரத்து குறைந்து, கவுண்டண்யா ஆற்றில் மூன்றாயிரம் கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. இந்தநிலையில், குடியாத்தம் மையப்பகுதியில் உள்ள கவுண்டன்யா ஆற்றின் நீர் வழிப்பாதையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள குடியிருப்புகள், கட்டடங்களை அகற்ற மாவட்ட ஆட்சியர் குமாரவேல் உத்தரவிட்டார். இதையடுத்து, ஜேசிபி இயந்திரம் கொண்டு ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நேற்று (நவ.27) தொடங்கியது.