வேலூர் மாவட்டம், வாணியம்பாடி பகுதியில் செயல்பட்டுவரும் தனியார் கலை அறிவியல் கல்லூரி மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் பொங்கல் விழா கொண்டாட்டம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இதற்காக புத்தாடை அணிந்து வந்த கல்லூரி மாணவிகள் கல்லூரிகளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொங்கல் விழாவில் கலந்து கொண்டு பொங்கல் வைத்து சிறப்பாகக் கொண்டாடினர். பின்னர் அங்கு அலங்கரித்து கொண்டுவரப்பட்ட காளைகளுக்கு பூஜை செய்த மாணவிகள் பொங்கல் வைத்து கொண்டாடி மகிழ்ந்தனர்.