தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அதிமுக முன்னாள் எம்.பி செங்குட்டுவன் மறைவு! - B. Senguttuvan died

அதிமுகவின் முன்னாள் எம்.பி பா.செங்குட்டுவன், உடல்நலக்குறைவால் இன்று காலை உயிரிழந்தார்.

senguttuvan-
எம்.பி செங்குட்டுவன்

By

Published : Aug 19, 2021, 11:13 AM IST

வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் 2014ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் அதிமுகவின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர் வழக்கறிஞர் பா. செங்குட்டுவன் (60).

கல்லீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த அவர், வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், இன்று (ஆக.19) காலை சிகிச்சைப் பலனின்றி செங்குட்டுவன் உயிரிழந்தார். அவரது உடல் காட்பாடி திருநகர் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. செங்குட்டுவனுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

இந்நிலையில், செங்குட்டுவனின் மறைவிற்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பாலியல் வன்கொடுமைகள் குறித்து புத்தகம்

ஜெயலலிதாவின் மறைவிற்குப் பின் அமமுக சென்றுவிட்டு மீண்டும் அதிமுகவில் இணைந்த செங்குட்டுவன், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் குறித்தும், அதை சட்ட வழியில் அணுகுவது, சட்டத்தில் உள்ள நுணுக்கங்கள் குறித்தும் புத்தகம் ஒன்றையும் எழுதியுள்ளார்.

செங்குட்டுவனின் இப்புத்தகத்தை முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி சதாசிவம் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:'சமூகநீதிக் காவலர் மோடியின் ஆட்சியில் விவசாயிகள் தற்கொலை இல்லை'

ABOUT THE AUTHOR

...view details