வேலூர் மக்களவைத் தொகுதிக்கான வாக்குப்பதிவு கடந்த ஐந்தாம் தேதி நடைபெற்றது. இதில், 71.51% வாக்குகள் பதிவாகின. வாக்குப்பதிவு முடிவடைந்தபின் மின்னணு வாக்கு இயந்திரங்களை பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர், மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான சண்முகசுந்தரம் மற்றும் அரசியல் கட்சி முகவர்கள் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் அங்குள்ள ஸ்ட்ராங் ரூம் எனப்படும் பாதுகாப்பு அறையில் வைத்து சீல் வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வாக்கு எண்ணும் மையத்தை சுற்றிலும் மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டது.
வேலூர் மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை! பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்! - வாக்கு
வேலூர்: மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறவுள்ளதை அடுத்து, வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் சண்முக சுதந்தரம் ஆய்வு செய்தார்.
மின்னணு வாக்கு இயந்திரம்
இந்நிலையில், ஏற்கனவே அறிவித்தபடி வேலூர் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணியளவில் தொடங்குகிறது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் முதலில், தபால் ஓட்டுகள் எண்ணப்படும். இதையொட்டி தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான சண்முக சுந்தரம் வாக்கு எண்ணும் மையத்திற்கு சென்று பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.