தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா தடுப்பு: திமுக எம்.எல்.ஏக்கள் ரூ.50 லட்சம் நிதி

வேலூர்: கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கார்த்திகேயன், நந்தகுமார் ஆகியோர் ரூ.50 லட்சத்துக்கான கசோலையை ஆட்சியரிடம் வழங்கினர்.

corona-found-to-collector
corona-found-to-collector

By

Published : Mar 27, 2020, 7:53 PM IST

உலகை உலுக்கும் கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. அதன்படி, நாடு முழுவதும் ஏப்ரல் 14ஆம் தேதிவரை 21 நாட்கள் ஊரடங்கு உத்தவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வேலூர் ஆட்சியர் அலுவலகம்

அதைத் தொடர்ந்து, வேலூர் மாவட்டத்தில் கரோனா வைரஸ் பரவலை தடுக்க வேலூர் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் கார்த்திகேயன், அணைக்கட்டு திமுக சட்டப்பேரவை உறுப்பினர் நந்தகுமார் இருவரும் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தலா ரூ.25 லட்சம் என ரூ.50 லட்சத்துக்கான கசோலையை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரத்திடம் வழங்கினர். அதையடுத்து அவர்கள் மாவட்டத்திற்கு மேலும் நிதி தேவைப்படும் பட்சத்தில் கூடுதல் நிதி வழங்க தாங்கள் தயாராகயிருப்பதாகவும் உறுதியளித்தனர்.

இதையும் படிங்க:இலவச தொகுப்பு: மதுரை நியாய விலைக் கடைகளில் பணிகள் தீவிரம்

ABOUT THE AUTHOR

...view details