வேலூர் மாவட்டத்திற்கு மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வந்திருந்தார். மேலும் இன்று அமாவாசை என்பதால் வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள கோயில்களில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
போக்குவரத்து காவலர்களுக்கு பதிலாக களத்தில் இறங்கிய திமுக எம்.பி - field instead of traffic police
வேலூர்: கிரீன் சர்க்கிள் பகுதியில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய திமுக எம்பி களத்தில் இறங்கியது வாகன ஓட்டிகளை ஆச்சிரியத்தில் ஆழ்த்தியது.

போக்குவரத்தை சரிசெய்த திமுக எம்பி கதிர் ஆனந்த்
போக்குவரத்தை சரிசெய்த திமுக எம்பி கதிர் ஆனந்த்
இதனால் வேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டது. இந்நிலையில் புதிய பேருந்து நிலையம் அருகே வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது வாகன நெரிசல் அதிகமாக இருப்பதை பார்த்த அவர் காரிலிருந்து இறங்கி போக்குவரத்தை சரிசெய்தார்.
இதையும் படிங்க: காட்பாடி ரயில்வே மேம்பாலம் பழுது விரைவில் சரிசெய்யப்படும்' - கதிர் ஆனந்த்