வேலூர் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் இன்று வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இன்று வந்திருந்தார். அவருடன் திமுக பொருளாரும், அவரது தந்தையுமான துரைமுருகன், திமுக எம்பி ஜெகத்ரட்சகன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில தலைவர் காதர் மொகைதீன், திமுக எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் வந்திருந்தனர். பின்னர் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான சண்முகசுந்தரத்திடம் தனது வேட்புமனுவை கதிர் ஆனந்த் தாக்கல் செய்தார்.
திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வேட்புமனு தாக்கல்! - திமுக வேட்பாளர்
வேலூர்: வேலூர் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் கதிர் ஆனந்த் இன்று மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரத்திடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.
vellore
பின்னர், செய்தியாளர்களிடம் துரைமுருகன் கூறுகையில், "இன்றிலிருந்து எங்களது தேர்தல் பரப்புரையை தொடங்குகிறோம். மத்திய அரசு ஹைட்ரோகார்பன் போன்ற மக்கள் விரோத திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த முயற்சிக்கிறார்கள். இனியும் அந்த திட்டத்தை செயல்படுத்த முயற்சித்தால் ஒட்டுமொத்த மக்களின் வெறுப்பை சந்திக்க வேண்டியிருக்கும். எதிர் போட்டியாளர் பற்றி எங்களுக்கு கவலையில்லை. மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி மாற வேண்டும் என்ற கொள்கையில் உறுதியாக இருக்கிறோம்" என்றார்.