தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஓய்வு பெறும் நாளில் வேலூர் வேளாண் இணை இயக்குநர் பணி நீக்கம் - துவரைப் பயிர் இடுவதற்காக வழங்கவேண்டிய மானியத் தொகை

வேலூர் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் ஓய்வு பெறும் நாளில் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ஓய்வு பெறும் நாளில் வேலூர் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் பணி நீக்கம்
ஓய்வு பெறும் நாளில் வேலூர் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் பணி நீக்கம்

By

Published : Jul 3, 2022, 11:36 AM IST

வேலூர் மாவட்ட வேளாண் இணை இயக்குநராக பணியாற்றி வந்தவர் மகேந்திர பிரதாப் தீட்சித் (60). இவர் நேற்று முன்தினம் ஓய்வு பெற இருந்த நிலையில், பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இவர் 2013- 2014 காலகட்டத்தில் உழவர்களுக்கு துவரைப் பயிர் இடுவதற்காக வழங்கவேண்டிய மானியத் தொகையில் ஊழல் செய்ததாக புகார் எழுந்தது.

இந்த புகாரின் அடிப்படையில் வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினர் 2020-ம் ஆண்டு மகேந்திர பிரதாப் தீட்சித் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வழக்கு நிலுவையில் உள்ளதால் பணி ஓய்வு வழங்க அனுமாதிக்காத நிலையில் தற்போது அவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க:7 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல் - கூச்சலிட்டதால் தீ வைத்த கொடூரம்

ABOUT THE AUTHOR

...view details