உலகை மிரட்டும் கரோனா வைரஸ் குறித்து வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்," பல முறை மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியும் மக்கள் அலட்சியமாக உள்ளனர். தினந்தோறும் காய்கறி, மளிகை, மாத்திரை வாங்குவதற்கு வெளியே வருகின்றனர். அதுமட்டுமின்றி சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் கும்பலாக வாங்குவது வேதனை அளிக்கிறது.
இந்தச் செயல்களால் மாவட்ட நிர்வாகத்தின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பயனற்றவையாக மாற்றிவிடும். இந்த நிலைமை நீடித்தால் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களிலிருந்து சுமார் 500 பேர் கரோனாவால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. ஆனால், அரசு மருத்துவமனையில் 125 செயற்கை சுவாச கருவிகள் (வென்ட்டிலேட்டர்) மட்டுமே உள்ளதால், சிகிச்சை அளிப்பதில் பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது.